×

ஆம்பூர் அருகே லாரியில் வந்து வெல்டிங் மிஷினால் கட் செய்து டிரான்ஸ்பார்மரில் ₹40 ஆயிரம் ஆயில் திருடிய கும்பல்-மின்வாரியத்தினர் போலீசில் புகார்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே லாரியில் வந்து வெல்டிங் மிஷினால் கட் செய்து டிரான்ஸ்பார்மரில் ₹40 ஆயிரம் ஆயிலை திருடிய கும்பல் தொடர்பாக மின்வாரியத்தினர் போலீசில் புகார் செய்தனர்.ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பட்டு பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பர்மர்களில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் ஆயில் திருடி வருகிறது. இதுகுறித்து மின்சார வாரியத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னவரிகம் ஊராட்சியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் லாரியுடன் வந்து அதிலிருந்த ஆயில் டேங்க் லாக்கரை அறுத்து டேங்கரில் இருந்த ₹40 ஆயிரம் மதிப்புள்ள 400 லிட்டர் ஆயிலை திருடி சென்றுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சின்னவரிகம் இளநிலை பொறியாளர் ஜோதி உமராபாத் போலீசில் புகார் அளித்தார். மேலும் பேரணாம்பட்டில் உள்ள உதவி செயற்பொறியாளருக்கும், குடியாத்தம் செயற்பொறியாளருக்கும் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சின்னவரிகம் இளநிலை பொறியாளர் ஜோதி கூறுகையில், ‘இந்த டிரான்ஸ்பார்மரில் 400 லிட்டர் ஆயில் நிரப்பப்பட்டு இருந்தது. இப்பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

மின்வாரிய ஊழியர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த ஆயில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. டெம்போ அல்லது லாரி போன்ற வாகனங்களை கொண்டு வந்து டிரான்ஸ்பார்மர் அருகே நிறுத்துகின்றனர். பின்னர், மின் இணைப்பை துண்டித்து ஆயில் டேங்கர் இணைப்பு கம்பியை வெல்டிங் மிஷினால் கட் செய்து ஆயிலை திருடிச்சென்றுள்ளனர்’ என்றார்.

1 லிட்டர் ஆயில் ₹85

ஆம்பூர்- கடாம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் தான் அதிக அளவு ஆயில் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. டிரான்ஸ்பார்மர்களில் திருடப்படும் ஆயில் மின்சார டிரான்ஸ்பார்மகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எந்த பயன்பாட்டுக்கும் இது உதவாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு லிட்டர் ஆயில் ₹85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post ஆம்பூர் அருகே லாரியில் வந்து வெல்டிங் மிஷினால் கட் செய்து டிரான்ஸ்பார்மரில் ₹40 ஆயிரம் ஆயில் திருடிய கும்பல்-மின்வாரியத்தினர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Ambur ,
× RELATED ஆம்பூர் அருகே இன்று அதிகாலை...