×

கந்தரப்பம்

தேவையானவை:

பச்சரிசி – 2 கப்,
உளுந்து – கால் கப்,
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – இரண்டரை கப்,
தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.

The post கந்தரப்பம் appeared first on Dinakaran.

Tags : Kandarapam ,
× RELATED சாமை மிளகு பொங்கல்