மும்பை: பிரான்ஸில் விமானத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் உள்பட 276 பேர் இந்தியா வந்தனர். ஆள் கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட விமானம் இன்று காலை மும்பை வந்தது.
25 பேர் பிரான்சிலேயே அடைக்கலம் கேட்டு தங்கினர்:
300 பேரில் 25 பேர் தங்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் இல்லை என்று பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸிலேயே அடைக்கலம் கேட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் விண்ணப்பித்த 25 பேர் இந்தியா திரும்பவில்லை. துபாயில் இருந்து 300 பேருடன் சென்ற தனியார் வாடகை விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸில் தரையிறங்கியது.
கடத்தல் புகார் விசாரணைக்குப் பின் 2 பேர் கைது:
ஆள் கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 3 நாட்கள் விசாரணைக்குப் பின் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் இந்தியா அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோதமாக அமெரிக்கா செல்லவிருந்தவர்கள் தடுப்பு:
துபாயிலிருந்து தனியார் விமானத்தை தனியாக வாடகைக்கு எடுத்து நிகரகுவா சென்று, அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் வாடகை விமானத்தில் சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா செல்ல இருந்த பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
The post பிரான்ஸில் விமானத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் உள்பட 276 பேர் இந்தியா வந்தனர்..!! appeared first on Dinakaran.