×

திமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான அவதூறு வழக்கு ரத்து

சென்னை: ராஜபாளையம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன், 2013ம் ஆண்டு, புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை திரும்ப பெற அரசு உத்தரவிட்ட போதும், உயர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரி வி.பி.ராஜன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post திமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான அவதூறு வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : DMK MLA ,VP Rajan ,Chennai ,Rajapalayam Constituency ,DMK ,MLA ,Jayalalithaa ,Pudukottai ,Pudukottai District Court ,Dinakaran ,
× RELATED தேர்தல் விளம்பரம் செய்த விவகாரம்...