The post வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சதுப்பு நில பகுதிகள், பவளப் பாறைகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சங்க கால மரங்களான 18 வகைகளை மீண்டும் நட்டு, மண்ணின் வளத்தை மீட்டெடுக்க வேண்டும். மனிதர்கள் விலங்குகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும். வன விலங்குகள், இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் மக்களையும் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.