×

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சில நாட்களாக திருமூர்த்திமலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்லும் வழித்தடம் அடைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Thirumurthimalai ,Panjalinga River ,Tiruppur ,Thirumurthimalai Panjalinga River ,Udumala ,Tiruppur district ,Udumali ,Thoniat ,Amanalingeshwarar ,Shiva ,Vishnu ,Brahma ,Thirumurthimalai Panjalinga River Floods ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...