The post தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.
தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவான 114 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திருவண்ணாமலை, விழுப்புரம் ,கடலூர் மாவட்டம் வழியாக பாய்ந்து சென்று கடலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.