நாடு முழுவதும் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 17,422 பேர் பலி ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி : கடந்த 2012 முதல் 2021ம் வரை கனமழை, வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் 17,422 பேர் பலியானதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்விக்கு ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு, ‘நாடு முழுவதும் கடந்த 2012 முதல் 2021ம் வரை (கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில்) கனமழை, வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் 17,422 பேர் இறந்தனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மாநிலம் வாரியான தரவுகளின் அடிப்படையில், மத்திய நீர் ஆணையம் தொகுத்துள்ளது.

இதன்படி பயிர்கள், வீடுகள், பொதுப் பயன்பாடு பகுதிகளின் மொத்த சேத மதிப்பு ரூ.2,76,004.05 கோடியாக கணக்கிடப்பட்டது. நிலத்தடி நீர் சேகரிப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை இயற்கை அடிப்படையிலான கட்டமைப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கிராமப் புறங்களை காட்டிலும் நகர்புறங்களில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திட்டமிடப்படாத வளர்ச்சி, இயற்கை நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தாதது போன்றவையாகும். இவற்றை தவிர்க்கும் ெபாருட்டு மாநில அரசுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றார்.

The post நாடு முழுவதும் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 17,422 பேர் பலி ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: