திருச்சி: அரியமங்கலம் அருகே உள்ள கணபதி நகரில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.