முகத்தை பொலிவாக்கும் பாலாடை

நன்றி குங்குமம் தோழி

பாலாடை சருமத்திற்கு ஈரப்பதத்தையும் சருமம் வறண்டு போவதையும் தடுக்கும். பாலை சூடு செய்து ஆறிய பிறகு அதன் மேல் ஏடு ேபால் இருக்கும் பாலாடையை முகத்தில் தடவினால் சருமம் மிருதுவாகும். இதில் புரதங்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. பளபளப்பை வழங்குவதோடு சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். முகத்தை பாலாடைக்கட்டி மூலம் மசாஜ் செய்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

பாலாடை மற்றும் மஞ்சள்: 1 டீஸ்பூன் பாலாடை, 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து முகம்
முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.

பாலாடை மற்றும் கற்றாழை ஜெல்:  2 டீஸ்பூன் பாலாடை, 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து
தண்ணீரில் கழுவவும்.

பாலாடை மற்றும் தேன்: 1 டீஸ்பூன் பாலாடை, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது
வெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு பாலாடை மாஸ்க் உபயோகிக்கலாம். பாலில் உள்ள ‘லாக்டிக் அமிலம்’ சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும்.

பாலாடையை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஸ்கிரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய் சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போடலாம். பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் முகத்தில் எந்த மாசும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

The post முகத்தை பொலிவாக்கும் பாலாடை appeared first on Dinakaran.

Related Stories: