கடந்த 1979ம் ஆண்டு எனது தந்தை இறந்த நிலையில், மேற்கண்ட வீட்டு மனை எனது கட்டுப்பாட்டில் இருந்தது. காலி மனையாக இடம் இருந்ததால் சிலர் எனது இடத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து, அபகரித்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது இடத்தை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆரோகியம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த பாபு (57), தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு விவேகானந்தா தெருவை சேர்ந்த குருசாமி (63), திருவேற்காடு அயப்பாக்கத்தை சேர்ந்த முருகப்பன் (61), திருவேற்காடு அன்பு நகர் 3வது தெருவை சேர்ந்த முத்து (55), வில்லிவாக்கம் ராஜமங்கலம் 3வது தெருவை சேர்ந்த நாகராஜ் (52) ஆகியோர், கூட்டாக சேர்ந்து லைசா ஜோஸ்பினுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 3,544 சதுரடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, இடத்தை அபகரித்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இன்ஸ்ெபக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார், மோசடியில் ஈடுபட்ட பாபு, குருசாமி, முருகப்பன், முத்து, நாகராஜ் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post போலி ஆவணம் தயாரித்து மூதாட்டிக்கு சொந்தமான ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு: 5 பேர் கைது appeared first on Dinakaran.