சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அவசர செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளகட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று நிர்வாகக்குழு, செயற்குழு நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் நிர்வாக குழுவை சேர்ந்த 5 பெரும் செயற்குழு நிர்வாகிகள் 27 பேரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்வது, தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் குழு அமைக்கவும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமயம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் இதுவரை 2 பொது தேர்தல்களை சந்தித்து வெற்றி கிடைக்காத நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படியாவது அணுக வேண்டும் என்பதை குறித்தும், வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு தரப்பினர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
The post சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.