புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பியா தலையிட கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு மணிப்பூரில் வன்முறைகளை தடுத்து, மத சிறுபான்மையினரை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த ஜுலை மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் நிக்கோலோ பீர் டெல்லி வந்துள்ளார்.
நேற்று சபாநாயர் ஓம் பிர்லா, நிக்கோலோ பீரை சந்தித்து பேசினார். அப்போது, “ஒவ்வொரு நாடும், நாடாளுமன்றமும் இறையாண்மை கொண்டவை. ஒரு நாட்டின் அரசியல், உள்விவகாரங்களில் வௌிநாடுகள் தலையிடக்கூடாது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது கண்டனத்துக்குரியது. அதை இந்தியா ஏற்காது” என்று இவ்வாறு கூறினார்.
The post இந்திய விவகாரங்களில் ஐரோப்பா தலையிடக்கூடாது: சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் appeared first on Dinakaran.