அடுத்த நாள் இந்திய தொழிலதிபர்களை சந்திக்கும் ராகுல், அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். 9ம் தேதி அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து, சயின்ஸ் போ பல்கலையில் மாணவர்களுடன் உரையாடுகிறார். 10ம் தேதி நெதர்லாந்து செல்லும் ராகுல் அங்கு 400 ஆண்டுகள் பழமையான லைடன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடுகிறார்.
11ம் தேதி நார்வே செல்லும் அவர் ஓஸ்லோவில் அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளை சந்தித்து பேசுகிறார். அத்துடன், ஓஸ்லோ பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுடன் உரையாடுகிறார். பின்னர் 12ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.
The post ஐரோப்பிய பயணத்தை தொடங்கினார் ராகுல்: 4 நாடுகளுக்கு செல்கிறார் appeared first on Dinakaran.