இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். சுப்பையா மற்றும் செல்வி இருவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதால் தினமும் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது சுப்பையா செல்வியை ஆபாசமாக பேசி திட்டி, அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, நள்ளிரவில் சுப்பையா கழுத்தை துணியால் நெரித்து கொன்றுள்ளார். பின்னர், அதிகாலை 3 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் சுப்பையாவின் மகள் வீட்டிற்கு சென்ற செல்வி, சுப்பையா போதையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நான், சடலத்தை இறக்கி கீழே வைத்துள்ளேன்,’’ என்று கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகள் மற்றும் உறவினர்கள், அங்கு சென்று பார்த்தனர். பின்னர், செல்வியிடம் இதுபற்றி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த உறவினர்கள் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், செல்வியை பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தீவிர விசாரணையில், போதையில் சுப்பையா தன்னை ஆபாசமாக திட்டி அடித்ததால், ஆத்திரமடைந்த நான் போதையில் அவரது கழுத்தை துணியால் நெரித்து கொன்று விட்டேன், என்று கூறினார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பையா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post போதையில் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் அனல்மின் நிலைய ஊழியர் கழுத்தை நெரித்து கொலை: தற்கொலை நாடகமாடிய கள்ளக்காதலி கைது appeared first on Dinakaran.