நீண்ட நேரமாக இந்த லாரிகள் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்ததுடன், போலீசார் குவிக்கப்பட்டதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க குவிந்தனர். கன்டெய்னரில் வெடி பொருட்கள் இருப்பதாகவும், உடனே இங்கிருந்து கலைந்து செல்லும்படியும் போலீசார் அவர்களை எச்சரித்தனர். வெடிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் போதிய பாதுகாப்புடன் கன்டெய்னர் பெட்டியில் அடைக்கப்பட்டிருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. யாரும் அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்புக்காக வந்த சரக்கு பெட்டக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு, அனைத்து கன்டெய்னர் லாரிகளும் அங்கிருந்து துறைமுகம் சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post எண்ணூர் விரைவு சாலையில் வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்ட 30 கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.