புது டெல்லி: இந்தியா-இங்கிலாந்து இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக உள்ளார். அதனால் இருதரப்பு உறவுகளில் சுமுக நிலை நிலவுகிறது. இந்த நிலையில் புதுடெல்லியில் நேற்று இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையே 12-வது நிதி மற்றும் வர்த்தக கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் உள்ளிட்ட இருதரப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் முடிவில், இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அதனால் இந்திய நிறுவனங்கள் லண்டன் ஸ்டாக் எக்ச்சேஞ்சில் நேரடி முதலீட்டை மேற்கொள்ள முடியும். உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப பகிர்வு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றில் இரு தரப்புகளிலும் பரஸ்பர எளிய நடைமுறை உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு, எந்திர கற்றல் ஆகியவற்றில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
The post இங்கிலாந்துடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.