பந்திப்பூர்: தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை துன்புறுத்திய நபருக்கு ரூ.25,000 வனத்துறை அபராதம் விதித்துள்ளது. அமைதியாக இருந்த யானையின் முன் நின்று புகைப்படம், வீடியோ எடுத்தது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.