×

மின் கம்பத்தை பற்றிப்படர்ந்த கொடிகள்: பொதுமக்கள் அச்சம்

ஆவடி: ஆவடியில் மின்சாரத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள மின் கம்பத்தில் செடி கொடிகள் சூழ்ந்து உயர் மின்னழுத்தம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் இந்த கடைக்கு வரும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். மேலும், பழமையான இந்த மின் கம்பத்தை சுற்றிலும் கீழிருந்து மேல் பகுதி வரை செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இது மட்டும் அல்லாமல் பல இடங்களில் மின் கம்பிகள் மீது செடிகள் உரசிய படியே செல்கின்றன. மேலும், வருகின்ற பருவமழை பெய்து வரும் நிலையில் இதனை அகற்றிட மின்வாரியம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலச்சிய போக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அதிகளவில் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில் கால்நடைகளும், பொதுமக்களுக்கும் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தை தொடும் பட்சத்தில் விபத்து ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மின்சாரத்துறை அலட்சியத்தால் இரண்டு தினத்திற்கு முன் உயர் மின் கசிவு காரணமாக ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செடிகள் படர்ந்து இருந்ததால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மின் கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மின் கம்பத்தை பற்றிப்படர்ந்த கொடிகள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Electricity Department ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு...