×

திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்: திருநின்றவூரில் நடந்தது

பெரியபாளையம்: திமுக பொறியாளர் அணியின் சென்னை மண்டல ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் நடைபெற்றது. சென்னை மண்டல அளவிலான திமுக பொறியாளர் அணி ஆய்வு கூட்டம், பொறுப்பாளர் ரா.நரேந்திரன் தலைமையில், திமுக மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்கேபி கருணா, மாநில தலைவர் துரை கி.சரவணன், துணை செயலாளர்கள் உமாகாந்த், சி.பிரதீப், பரமேசுகுமார் ஆகியோர் முன்னிலையில் திருநின்றவூர் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எம்.மோகன் வரவேற்புரையற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொறியாளர் அணியின் மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் அளவில் பொறியாளர் நிர்வாகி நேர்காணல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரோஸ் பொன்னையன், தலைவர் பிரசாந்த் துணைத்தலைவர் துளசிராமன், தமிழ் பிரியன் காண்டீபன், மணிகண்டன் கோகுல்நாத், தேவராஜ், கவுரிசங்கர், பிரபாகர், விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்: திருநின்றவூரில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruninnavur ,Periyapalayam ,DMK engineering team ,Chennai ,Tiruvallur ,district ,Ra. Narendran ,SKP Karuna ,
× RELATED திருநின்றவூர் ராமர் கோயில் ஏரியில்...