×

முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நேரில் அஞ்சலி

பொன்னேரி: மீஞ்சூரை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரம் மறைவிற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் க.சுந்தரம் முன்னாள் திமுக அமைச்சர் நேற்று முன்தினம் உடல் நலக் குறைவால் காலமானார். தகவல் அறிந்ததும் நேற்று மாலை அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியம், சி.வி.கணேசன், மதிவேந்தன், கலாநிதி வீராசாமி எம்பி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, ராஜன், மாவட்ட செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.பி.பி.சங்கர் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன்.

குதி செயலாளர் அருள்தாஸ், திமுக தலைமை நிர்வாகி பத்மநாபன், திமுக மாவட்ட அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், பொன்னேரி சுகுமாரன், மணிபாலன், புழல் நாராயணன், ஆரணி ரோஸ் பொன்னையா, பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி தலைவி உமா காத்துவராயன், வி.பி.ராஜா, மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பலராமன், பொன் ராஜா, இளைஞர் அணி ராகேஷ், பாஜ நிர்வாகிகள் அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் சுந்தரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

The post முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DMK ,minister ,K. Sundaram ,Meenjoor ,Meenjoor, ,Tiruvallur district ,Ministers ,
× RELATED திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம்...