×

வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்கும் அதானி நிறுவனம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம்,கோடாவில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை மொத்தம் 1600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உடையது. இந்த நிலையத்தின் 800 மெகாவாட் முதல் யூனிட் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உற்பத்தியை தொடங்கியது. இந்நிலையில், 800 மெகாவாட் உற்பத்தி செய்யும் 2வது யூனிட் கடந்த 25ம் தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோடா மின் ஆலையில் இருந்து வங்கதேசத்துக்கு மின் வினியோகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அதானி பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வங்கதேசத்துக்கு மின் வினியோகம் செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் ஆனது. அந்நாட்டுக்கு 1496 மெகாவாட் மின் உற்பத்தி சப்ளை செய்யப்படும். இந்த மின் வினியோகத்தின் மூலம் மின் உற்பத்திக்காக அந்த நாட்டின் செலவு கணிசமாக குறையும் என தெரிவித்துள்ளது.

The post வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்கும் அதானி நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Adani Company ,Bangladesh ,New Delhi ,Adani Power Company ,Power Station ,Koda, Jharkhand State ,Adani ,Dinakaran ,
× RELATED ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரிப்பு...