×

15ம் தேதி பாக். செல்கிறார் ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டை இந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. வரும் 15 மற்றும் 16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றார்.பிரதமர் மோடிக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 15ம் தேதி பாக். செல்கிறார் ஜெய்சங்கர் appeared first on Dinakaran.

Tags : Jaishankar ,New Delhi ,Pakistan ,Shanghai Cooperation Organization ,SCO ,Modi ,Islamabad ,India ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்த...