The post வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியானவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு பிறகு உரியவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.