தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் மீதான வழக்கு ரத்து

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், வேட்பு மனுவில் தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தில் மிலானி என்பவர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 2 பேர் மீதும் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.இதை ரத்து செய்யக் கோரி, பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரமாண மனு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் புகார் மனுவை ஏற்க கூடாது. பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: