அதே போல நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்நேரத்திலும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் I.N.D.I.A கூட்டணி உடனே சுதாரிக்க வேண்டும் என்று, செப்டம்பர் 30ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஆமோதித்துள்ளார். தென் மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லை என்பதால் நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் மட்டுமாவது விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
அதே போல கூட்டணிக்கான பொதுவான செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கையை அக் 2ம் தேதி அன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.பொதுவான செயல் திட்டம் வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆமோதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒருங்கிணைப்பு குழுவில் 11 பேருக்கு பதிலாக மேலும் சில உறுப்பினர்களை சேர்க்கலாம் என்று காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
The post முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்?.. செப்டம்பருக்கு தொகுதி பங்கீடு… அக் 2ம் தேதி தேர்தல் அறிக்கை : I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் யோசனை!! appeared first on Dinakaran.