வாக்கிங் ஸ்டிக் முதல் பேபி வாக்கர் வரை 193 சுயேச்சை சின்னங்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: வாக்கிங் ஸ்டிக் முதல் பேபி வாக்கர் வரை 193 சுயேச்சை சின்னங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் மாநில தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்குவதற்கான பணிகள் நடந்தன. அதன் அடிப்படையில் வாக்கிங் ஸ்டிக் முதல் பேபி வாக்கர் வரையில் புதிதாக 193 சுயேச்சை சின்னங்களை தேர்தல் கமிஷன் தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த மே15ம் தேதி தேர்தல் ஆணையம் இந்த சின்னங்களை வெளியிட்டுள்ளது. இதில் வாக்கிங் ஸ்டிக், பேபி வாக்கர், ஏர் கண்டிஷனர், பலூன், வளையல்கள், விசில், ஜன்னல், கம்பளி ஊசி, தர்ப்பூசணி, வால்நட், மணிபர்ஸ், வயலின், வாக்கும் கிளீனர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் இந்த சின்னங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

The post வாக்கிங் ஸ்டிக் முதல் பேபி வாக்கர் வரை 193 சுயேச்சை சின்னங்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன் appeared first on Dinakaran.

Related Stories: