×

தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு

டெல்லி: தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். கருப்பு பணத்தை 100 நாளில் மீட்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது. ஊழல் தொழிலதிபர்கள், அரசுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாவதன் மூலம், பிரதமரின் உண்மையான முகம் வெளிப்பட உள்ளது. நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசிர்வாதம் – சாமானிய மக்களின் மீது வரி சுமை. இதுதான் மோடி அரசு. இந்திய வரலாற்றிலேயே தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்பது நிரூபணமாக போகிறது எனவும் கூறினார்

The post தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...