சேலம்: அமித்ஷாவோ, நட்டாவோ, மோடியோ அதிமுகவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவினர் அதிமுகவுடன் சீட்டு ஒதுக்கீடு சம்பந்தமாகவும் எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்கள் மனதை காயப்படுத்திவிட்டது. தொண்டர்கள் உழைத்தால்தான் கட்சி வெற்றி பெற முடியும், தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக கோரியதாக கூறுவது தவறானது. பாஜகவிடம் அதிமுக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும் கூறினார்.
The post மோடி, அமித்ஷா அழுத்தம் தரவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.