×

துரந்த் கோப்பை கால்பந்து தேதி, இடங்கள் அறிவிப்பு

ஆசியாவிலேயே பழமையான கால்பந்து போட்டியான துரந்த் கோப்பைக்கான தொடர் நடைபெறும் இடங்கள், தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டுக்கான 134வது துரந்த் கோப்பை ஜூலை 22ம் தேதி முதல் ஆக.23ம் தேதி வரை நடைபெறும். லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இம்பால் (மணிப்பால்), கோக்ராஜ்ஹர் (அசாம்), ராஞ்சி (ஜார்கண்ட்), ஷில்லாங் (மேகாலயா), கொல்கத்தா (மேற்கு வங்கம்) ஆகிய நகரங்களில் நடைபெறும். நாட்டின் முப்படைகள் சார்பில் இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலம், ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த போட்டியை நடத்துகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களும் முக்கிய பங்களிப்பாளர்களாக இருக்கும். இந்தப்போட்டியில் ராணுவம், துணை ராணுவத்தை சேர்ந்த அணிகள், இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகள், நேபாளம், வங்கதேசம் என அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ அணிகள் என மொத்தம் 24 அணிகள் பங்கேற்பது வாடிக்கை. கடந்த முறை ஐஎஸ்எல் அணியான நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

The post துரந்த் கோப்பை கால்பந்து தேதி, இடங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Durant Cup ,Asia ,134th Durant Cup ,Dinakaran ,
× RELATED 3 குழந்தைகள் உள்ள நிலையில் பாக்....