×

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணியின் மாவட்ட- மாநகர- மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 25ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் திருச்சி ஓட்டலில் நடைபெற உள்ளது.

மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.இரகு, நா.இளையராஜா, அப்துல் மாலிக், கே.இ.பிராகாஷ் எம்பி, க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், திமுக இளைஞர் அணி ஆக்கப்பணிகள் பொருள் குறித்து விவாதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Youth ,Udhayanidhi Stalin ,Chennai ,DMK Youth Team ,DMK Youth Team District ,Dinakaran ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...