தற்போது 4வதாக கவுன்சிலர் சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இதனால், 146, 122, 165, 59 ஆகிய வார்டுகள் காலியாக உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘பெருநகர சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு உறுப்பினரும், திமுக துறைமுகம் மேற்குப் பகுதி துணைச் செயலாளருமான சரஸ்வதி கருணாநிதி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி நற்பெயர் பெற்றிருந்தார். அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். சென்னை மேயர் பிரியாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post திமுக பெண் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.