- திமுக
- அதிமுக
- கமலை
- கனிமொழி
- ராமநாதபுரம் மாவட்டம்
- Chayalgudi
- நவாஸ் கனி
- இந்தியா கூட்டணி
- ராமநாதபுரம்
- பாஜக
- அரசு
- கனிமோஜி கலை
- தின மலர்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கனிமொழி எம்பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டின் உரிமை, வளத்தை பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி போட்டு வியாபாரிகளை சித்ரவதை செய்கிறது. திமுக அரசின் 75% நிதி உள்ள திட்டத்தில், 25% சதவீதம் அவர்கள் நிதியை சேர்த்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர். இந்த விஷயத்தில் அதிமுக சின்ன ஸ்டிக்கர் என்றால், பாஜ பெரிய ஸ்டிக்கர். பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நூறு நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நூறு நாள் வேலை முழுமையாக கொடுக்காமல் 25 நாட்கள் மட்டும் வேலை கொடுக்கப்படுகிறது. அதற்கும் கூலி 4, 6 மாதம் கழித்து வழங்கப்படுகிறது. மக்களிடம் பிரிவினை வாதத்தை தூண்டி, மக்களை பிரித்து, சூழ்ச்சியால் ஆட்சி ஆள நினைக்கும் பாஜ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுக சின்ன ஸ்டிக்கர்… பாஜ பெரிய ஸ்டிக்கர்… கனிமொழி கலாய் appeared first on Dinakaran.