ஸ்ரீபெரும்புதூரில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரும்புதூர் பேரூராட்சி சின்னக்கடை சதுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, பொது குழு உறுப்பினர் கணேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதி நேரு, பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திமுக பேச்சாளர் நாகம்மை கருப்பையா கலந்து கொண்டு பேசுகையில், ‘திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் பதவியேற்றது முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தது. மேலும், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தாமல் தொடர்வதற்காக, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் தி ட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகள் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 2 ஆண்டுகால ஆட்சியில் அதனை செயல்படுத்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பாலா, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மோகனன், சர்தார்பாஷா, துணை அமைப்பாளர் தண்டலம் மனோஜ், பேரூர் நிர்வாகிகள் வேணுகோபால், குமார், ஆறுமுகம், பேரூர் இளைஞரணி கார்திகேயன், சீனிவாசன், மாணவரணி நிர்வாகிகள் சதீஷ், லோகேஷ், மகளிரணி நிர்வாகிகள் மஞ்சுளா, மகேஷ்வரி, அம்சா, வள்ளி, சரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: