முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.5ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 5ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக மாவட்ட
செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.5ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: