திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாவட்ட திமுக செயலாளர்கள், 234 தொகுதிகளுக்கான திமுக தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘திமுக உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

புதிதாக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கை ஜூன் 3ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தற்ேபாது உறுப்பினர் சேர்க்கை எந்த அளவில் நடந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையின் போது இளைஞர்களை அதிகளவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பூத் கமிட்டி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அப்போது ஆலோசனை வழங்கினார். மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அது தான் நமது இலக்கு. அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே விரைவுப்படுத்த வேண்டும். 100 சதவீதம் வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும். மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

The post திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: