சென்னை: விஜயகாந்த் ஓர் அற்புதமான மனிதர், அனைவரையும் சமமாக மதித்தவர் என்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தே.மு.தி.கவின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரையும் சமமாக மதித்தவர். அனைவரிடமும் அன்பு காட்டியவர்,” எனத் தெரிவித்துள்ளார்.
The post “விஜயகாந்த் அற்புதமான மனிதர், அனைவரையும் சமமாக மதித்தவர்” : அன்புமணி புகழஞ்சலி appeared first on Dinakaran.