தீபாவளி பண்டிகை எதிரொலி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரவு

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி வருகிற 5ம் தேதி (ஞாயிறு) ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், ரேஷன் பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வார நாட்களில் வாங்குவார்கள். இதற்கு வசதியாக முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை விடப்படும். 3வது, 4வது வாரம் வெள்ளிக்கிழமை விடுமுறை ஆகும். தற்போது, வருகிற 12ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை வர உள்ளதால்மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் வருகிற 5ம் தேதி (ஞாயிறு) ரேஷன் கடைகளை திறக்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில், ‘‘தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று வருகிற 5ம் தேதி (ஞாயிறு) ரேஷன் கடைகள் இயங்கும். அன்றைய தினம் பொதுமக்கள் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகை எதிரொலி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: