இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தீபாவளி 2023 பண்டிகைக்கும் தரமான சிறப்பு இனிப்பு வகைகள் எவ்வித விலை மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படவுள்ளது. ஆவின் இனிப்பு வகைகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்புகளாகும். இனிப்பு வகைகள் அனைத்தும் வருகின்ற 10.10.2023 முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக கிடைக்கப்பெறும். பொதுமக்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பெற்று பயன்பெறலாம். மேலும் சிறு, குறு நிறுவனங்கள், தனியார் பெரு நிறுவனங்கள், அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகள் ஆர்டர் செய்ய ஆவின் முகவரி மற்றும் தொலைபேசியை தொடர்ப்பு கொள்ளலாம்.
ஆவின் பொருட்கள்
கிராம் விலை
காஜூ கட்லீ 250 ரூ.260
நட்ஸ் அல்வா 250 ரூ.190
மோத்தி பாக் 250 ரூ.180
காஜு
பிஸ்தா ரோல் 250 ரூ.320
நெய் பாதுஷா 250 ரூ.190
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.