தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.28ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை: 15,000 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்..!!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வரும் 28ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக வரும் 28ம் தேதி அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் 8 மண்டல போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என 4 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து அக்டோபர் 28ல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.28ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை: 15,000 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: