×

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்தே கால் லட்சம் பேரும், ரயில்கள் மூலம் 4 லட்சம் பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தீபாவளி விடுமுறையை முடித்துவிட்டு திங்கட்கிழமையன்று சென்னைக்கு திரும்புவார்கள் சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக திங்கள்கிழமை அதிகாலை முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காட்டாங்கொளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து வரும் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரயில்கள் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali ,Railway ,Southern Railway ,Diwali festival ,Klambakkam ,station ,
× RELATED டெண்டர் விடப்பட்டு 4 ஆண்டுகளாகியும்...