கடந்த 1 மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் அவசியமானவை பிரபலமில்லாத இணையதளங்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் பணத்தை கொடுப்பதற்கு முன் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் மோசடி குறித்து புகாரளிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவுகள் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ டயல் செய்து புகாரளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post குறைந்த விலையில் தீபாவளி பட்டாசு.. போலி இணையதளத்தை பார்த்து ஏமாறவேண்டாம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.