சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படையை சென்னை காவல்துறை அமைத்துள்ளது. தனிப்படை காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில், ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அச்சமயம் 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் சுமார் 18,000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post தீபாவளியன்று 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து சென்னை காவல்துறை நடவடிக்கை!! appeared first on Dinakaran.