தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் என, 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். முதலில், ரேஷன் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரைதான் இயங்கி வந்தன. ஆனால், மாதத்தின், முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை, விடுமுறை நாளாக இருக்கும் என தமிழக அரசு மாற்றியது. அதன்படி, ரேஷன் கடைகள், மாதத்தின், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான வணிக சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 2 மற்றும் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி தமிழக அரசு அரசு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: