×

மதயானை கூட்டம், ராவண கோட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்

சென்னை: மதயானை கூட்டம், ராவண கோட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளரிடம் கதை கூறிவிட்டு, நள்ளிரவு சென்னையை நோக்கி பேருந்து ஏறும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

விக்ரம் சுகுமாரன் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில் இவர் மதுரை வட்டார மொழி பயிற்றுநராக பணியாற்றியுள்ளார்.

இதனையடுத்து மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின்னர் 6 வருடங்கள் கழித்து ராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில், நேற்று மதுரையில் தயாரிப்பாளரிடம் திரைப்படத்திற்கான கதை கூறிவிட்டு, நள்ளிரவு சென்னையை நோக்கி பேருந்து ஏறும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள இல்லத்துக்கு விக்ரம் சுகுமாரன் உடல் கொண்டுவரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post மதயானை கூட்டம், ராவண கோட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Tags : MADAYANA MEETING ,RAVANA ,KOTAM ,VIKRAM SUGUMARAN ,Chennai ,Madayana Gautam ,Madura ,Balu Mahendra ,Madayana ,Vikram Sukumaran ,Dinakaran ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு