திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பன்னீர் திராட்சை விளைச்சல் பாதிப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பன்னீர் திராட்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி, ஊத்துபட்டி, கலிக்கம்பட்டி உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னீர் திராச்சை பயிர் செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பன்னீர் திராட்சை நல்ல மகசூல் கொண்டுள்ளது.

அறுவடைக்கு தயாரான நிலையில் சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்ததன் காரணமாக பழங்கள் கொடியிலே வெடித்து அழுகி வீணாகியுள்ளது 10,000 கிலோ எடுக்கவேண்டிய இடத்தில வெறும் 2000 கிலோ திராட்சை மட்டுமே கிடைப்பதாகவும். கிலோ ரூ.70க்கு விற்க வேண்டிய திராட்சை ரூ.20க்கு தான் விலைபோகிறது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தங்கள் பகுதியில் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பன்னீர் திராட்சை விளைச்சல் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: