தேவர் குருபூஜை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாடகை வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் திலக் குமார் மற்றும் ரவி ஆஜராகி, ‘‘2017ல் வாடகை வாகனத்தில் செல்ல ஐகோர்ட் தடை உத்தரவு உள்ளது. அதனை பின்பற்றி தற்போது வாடகை வாகன அனுமதி கொடுப்பதில்லை. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளது. இதனால் அனுமதிக்க முடியாது. ஆனால் மக்கள் தடையின்றி செல்ல 5 மாவட்டங்களில் இருந்தும் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன’’ என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு உள்ளது. அதனால் வாடகை வாகனங்களை அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் அரசு தரப்பில் பக்கத்து மாவட்டத்தில் இருந்து மக்கள் தடையின்றி வர 500 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் புதுகோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வாடகை வாகனத்தில் செல்ல தடை விதித்த அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது. இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனத்தில் செல்வதற்கு தடை: அரசு உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.