- OPS
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- தகவல் மையம்
- ஓய்வூதிய இயக்குநரகம்
- சிறு சேமிப்பு இயக்ககம்
- கருவூலம் மற்றும் கணக்குத் துறை
- தின மலர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: தற்போது அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து அரசாணை பிறப்பித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் மேற்படி செயல் மூலம், அரசு வேலைவாய்ப்புகள் இனி உருவாக்கப்படமாட்டாது என்பதும், காலிப் பணியிடகள் தேவைக்கேற்ப நிரப்பப்படாது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் இனி கானல் நீர் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் 3 துறைகளுக்கு பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post 3 துறைகளுக்கான ஆணையை உடனே திரும்பப் பெற ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.