தஞ்சாவூர்: மணிப்பூர் கலவரத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தாமல், வேடிக்கை பார்த்து வருவதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று தஞ்சாவூர் ரயிலடி முன் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மூகாம்பிகை முன்னிலை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை கவுரவ தலைவர் நாத்திகன் துவக்கி வைத்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
