விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களின் உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆசிரியர் போராட்டம் தொடரும் நிலையில் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, காலதாமதமின்றி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஆசிரியர்கள் மீது கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தினர்.
The post ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அரசுக்கு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.